Friday, October 12, 2012

இன்றைய கல்வித் திட்டத்தின் அனுசரணையில் நவீன இஸ்லாமிய எழுச்சி!

by Ibnu Muhinudeen
வஹியின் மொழியில் கல்வியை போற்றும் ஊக்குவிக்கும் கருத்துக்கள் பல உண்டு .ஆனால் சமகாலக் கல்வி வஹி போற்றும் தரத்திலா காணப்படுகின்றது ? என்பது ஆராயப் படவேண்டிய முஸ்லீம் உம்மா உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டாய விடயமாகும் . இங்கு சமகால கல்வியையோ அதன் அறிஞர் பெருமக்களையோ விமர்சிப்பது எனது நோக்க மல்ல .ஆனால் முதலாளித்துவம் + மதச்சார்பின்மை எனும் சிந்தனைத்தரத்தின் வழிகாட்டலில் வரையப்பட்ட இன்றைய கல்வித் திட்டத்தின் அனுசரணையில் நவீன இஸ்லாமிய எழுச்சி எனும் நியாயம் புடம் போடப்படுவது தவறில் முடியலாம் என்பதே எனது வாதமாகும் . 
முதலில் ('செக்கியுலரிசம்' எனும் ) மதச்சார்பின்மை என்பது என்ன என்பது பற்றி 
நாம் புரிந்து கொள்ள வேண்டும் . சித்தாந்த ரீதியாகவோ ,வரைவிலக்கண பார்வையிலோ இங்கு நான் அதை விளங்கப்படுத்தப்போவதில்லை . ஆனால் அது பற்றி புரிந்து கொள்ள ஆழ்ந்த விளக்கம் ஓன்று தேவையில்லை அது செய்ய நினைப்பது அல்லாஹ்வின்(சுப) அதிகாரங்களை கட்டுப்படுத்தி ,மட்டுப்படுத்தி , அதை விட ஒரு 'ஹை கோட்டாக' மனித சட்டங்களை சரிகாண்பதே. நீங்கள் மஸ்ஜித்களில் அல்லாஹ்வை (சுப ) அழைப்பதும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிவதும் அனுமதிக்கப்படும் .அதை விட சற்று அதிகமாக கூட அனுமதிக்கும் ஆனால் வஹியே வாழ்க்கையாக அது அனுமதிக்காது ;அப்போது மனித விருப்பு வெறுப்பு எனும் நியாயங்களோடு இறை வழி
காட்டல்களை உங்களது கரத்தினாலேயே மியூசியத்தில் வைக்கச்சொல்லும்  . 
இந்த மனோ நிலையின் கல்வித்திட்டமே இன்று நடை முறையில் உள்ளது .அதாவது வாழ்வியலில் அதிகாரம் செய்யும் உரிமை மதத்திற்கு இல்லை என்பதே .
முதலாளித்துவம் உலக அரங்கில் மேலோங்கியுள்ள ஒரு சிந்தனையாகும் அது சமரசத்தை அடிப்படையாக கொண்டதும் ,மேலே குறிப்பிட்ட மதச்சார்பின்மையை அலகாக கொண்ட அரசியலையே செய்து வருகின்றது .பண்முகப்படுத்தப்பட்ட அதன் சமூக தொடர்பு நிறுவனங்களாக I.M.F, World bank என்பன காணப்படுவதுடன் தமது நிதி வளங்களோடு நிபந்தனை எனும் கொள்கை திணிப்பையும் தாராளமாகவே செய்து 
வருகின்றது . அதாவது கல்வித்திட்டம் உட்பட இந்த அழுத்தம் தவிர்க்க முடியாததாய் ஆகி விட்டுள்ளது . எனவேதான் 
இந்த ஆபத்தின் மையத்திலிருந்து இஸ்லாத்தை கொண்டு வரப்போகிறோம் என ஏறத்தாள என்பது வருட காலம் இயக்கம் செய்து ஆட்சியை பிடித்த எகிப்தின் பிரபல்யமான அந்த இயக்கம் கூட I.M.F இன் சதிவலையில் சுலபமாக 
விழுந்ததை காணலாம் . இவர்கள் கூட எந்த மதச்சார்பின்மையை எதிர்த்தார்களோ அதன் பின்னாலேயே அணிவகுத்துக்கொண்டு இஸ்லாம் பேசவும் தலைப்பட்டு விட்டார்கள் .
இந்த கல்வித்திட்டத்தின் வழி உருவாகும் இஸ்லாமிய அறிஞ்சர்கள் கூட இரட்டை தோனி பார்வையிலேயே களம் குதிக்கிறார்கள் . ஒருபக்கம் இஸ்லாம் இன்னொரு பக்கம் நடைமுறை உலகம் எனும் முதலாளித்துவம் . எனவே இன்றைய கல்வித்திட்டத்தின் வழி அறிவுத்தேடல் அல்லாஹ்வை (சுப )உணராததால் ஆபத்தில் போய் முடியும் என்பதே எனது அபிப்பிராயமாகும் .


No comments:

Post a Comment